காசு இருந்தும் வைத்தியம் பார்க்க முடியாத சூழல் இது – கார்த்தி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இதனால் திரைப்படங்களின் படப்பிடிப்பகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது: “நான் சின்ன குழந்தையாக, சிறுவனாக இருந்தபோது அப்பா (நடிகர் சிவகுமார்) ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அப்பாவை நிறைய ‘மிஸ்’ பண்ணியிருக்கிறேன். அந்த குறை, என் மகளுக்கு வரக்கூடாது என்பதற்காக, இந்த ஓய்வு நாட்களை பயன்படுத்திக் கொள்கிறேன். என் மகளுடன் நிறைய நேரத்தை செலவிடுகிறேன்.

தினமும் மூன்று வேளையும் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம். இப்போதைய சூழ்நிலையில், பெரும்பாலானவர்களுக்கு கையில் காசு இருக்கும். ஆனால் வைத்தியம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால், வீட்டிலேயே இருப்போம்… பாதுகாப்பாக இருப்போம்”. இவ்வாறு அவர் கூறினார்.

Suresh

Recent Posts

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

5 hours ago

ஸ்டைலிஷ் உடையில் சமந்தா, போட்டோஸ் இதோ.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை…

12 hours ago

வடசென்னை 2: தனுஷ் சொன்ன தகவல்.!!

வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…

12 hours ago

டான்ஸ் ஆடுவது குறித்து தமன்னா சொன்ன தகவல்.!

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து…

12 hours ago

முத்து விரித்த வலை,சிக்கினாரா விஜயா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது…

15 hours ago

சிங்காரம் சொன்ன வார்த்தை, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

15 hours ago