pooja hegde
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ‘அருவா’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இவரது பெயர் அடிபட்டது. ஆனால் ராஷி கன்னா தேர்வாகி உள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன. இதனால் சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார். இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ‘கபி ஈத் கபி’ என்ற படத்தில் நடிக்கிறார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
இந்த நிலையில் இன்னொரு இந்தி படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவை படக்குழுவினர் அணுகி உள்ளனர். படத்தில் கவர்ச்சி காட்சிகளும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளும் உள்ளன என்று அவரிடம் தெரிவித்து கதை சொல்லி உள்ளனர்.
நெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டுமானால் ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று பூஜா ஹெக்டே கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேர்வு செய்வதா, வேண்டாமா? என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர்.
பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ உள்ளிட்ட பெரிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர்…
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது 4-வது திருமண நாளை குடும்பத்துடன் சிறப்பாக…
‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், தனது அடுத்த…
தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள…
மர்மம், குற்ற விசாரணை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆட்டி’. மலைப்பகுதியை…
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju