என்னால் அப்படி செய்ய முடியாது – இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி துபாயில் நடக்கிறது. இதுகுறித்து துபாயில் இளையராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தற்போது தமிழ் பட உலகில் இருக்கும் இசையமைப்பாளர்கள், திரைப்படங்களுக்கு சுதந்திரமாக இசையமைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து இளையராஜா கூறியதாவது:-

இசையமைப்பாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும் அவர்கள் விருப்பத்துக்கு இசையமைத்தால் அதை முழு சுதந்திரம் என்று எப்படி சொல்ல முடியும்? சுதந்திரமாக இசையமைப்பதால் மட்டுமே பாடல்கள் நிற்பதில்லை. ஒரே விஷயத்தை அதே மாதிரி ஏன் திரும்ப செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட பாடலை சொல்லி அதுமாதிரியான பாடல் வேண்டும் என்று யாராவது கேட்டால் என்னால் கொடுக்க முடியாது. மற்றவர்கள் அதே மாதிரி பாடலை உருவாக்கி கொடுக்கலாம். ஆனால் என்னால் அப்படி செய்ய முடியாது. ஒவ்வொரு பாடலையும் புதிதாகத்தான் உருவாக்குவேன்.

பாடல்கள் நன்றாக இருக்கலாம். அல்லது அந்த பாடல்கள் நன்றாக இல்லாமல் போகலாம். யாராக இருந்தாலும் 7 ஸ்வரங்களை பயன்படுத்தித்தான் பாடல்களை உருவாக்குகிறார்கள். அதே ஸ்வரம் என் கைக்கு வரும்போது புதுமாதிரி ஆகிறது. மற்றவர்களின் கைக்குள் போகும்போது அவர்களுக்கு ஏற்ற மாதிரி அந்த ஸ்வரம் மாறிக்கொள்கிறது.

இவ்வாறு இளையராஜா கூறினார்.

Suresh

Recent Posts

கம்ருதீன் சொன்ன வார்த்தை,ரம்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

5 hours ago

பைசன்: முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…

6 hours ago

முத்து மீனாவுக்கு வந்த சந்தேகம், ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

6 hours ago

இந்த வாரம் சிறைக்குச் செல்ல போகும் இரண்டு போட்டியாளர்கள் யார்? வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

8 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

9 hours ago

சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

22 hours ago