iniya actress
ஊரடங்கு குறித்து நடிகை இனியா அளித்த பேட்டியில் கூறியதாவது: பள்ளிகளில் ஏப்ரல், மே மாதம் விடுமுறை விட்டால் ஒரு சந்தோஷம் இருக்கும்ல, அந்த மாதிரி இருக்கு. என்னோட பள்ளி நண்பர்கள் கூட அதிகம் பேசுறேன். இதெல்லாம் இந்த ஊரடங்கில் ரொம்ப ஜாலிதான். தவிர, எனக்கு கிளாசிக்கல் டான்ஸ் தெரியும். இந்தக் கடுமையான நேரத்துல கேரளா அரசாங்கம் எடுக்கிற முடிவுகள், அவங்களோட விதிமுறைகள் எல்லாம் நல்லா இருக்கு. சீக்கிரமே இந்தச் சூழல் மாறிடும்னு நம்பிக்கை தருது.
“என் வீடு திருவனந்தபுரத்துல இருக்கு. ஒரு நிகழ்ச்சிக்காக கொச்சின் வந்திருந்தேன். அப்பதான் ஒருநாள் ஊரடங்கு அறிவித்தார்கள். அதுக்குப் பிறகு, என்னால திருவனந்தபுரத்துக்கும் போக முடியாமல் சென்னைக்கும் வர முடியாமல் கொச்சின்ல மாட்டிக்கிட்டேன். அக்கா வீட்ல இருக்கேன். இந்த ஊரடங்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை. நிறைய பேருக்கு இது ரொம்ப ரொம்ப சவாலான சூழல்.
நம்ம இயற்கைக்கு என்ன செய்றோமோ அதைத்தான் இயற்கை நமக்கு திருப்பிக்கொடுக்கும். அப்படி நம்ம அனுபவிக்கிற காலம் இது. அதனால இந்தப் பாடத்தை நம்ம ஏத்துக்கிட்டு இந்தச் சூழலை கடந்துதான் வந்தாகணும்“ இவ்வாறு அவர் கூறினார்.
Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…
Double Occupancy Official Trailer | Santhosh, Reshma, Samyuktha, Vinoth | Aswin Kandasamy
நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி…
94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன்…
கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10…
ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…