இதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன் – விக்னேஷ் சிவன் டுவிட்

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘அந்தக் கண்ண பாத்தாக்கா’ பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இதேபோல் குவிட் பண்ணுடா எனும் பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், முதன்முறையாக விஜய் படத்திற்கு பாடல் எழுதிய அனுபவம் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது: “விஜய் சாருக்காக நான் எழுதிய முதல் பாடல் இது. இதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன். அனிருத், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் ஆகியோரால் இது சாத்தியமானது. இந்த பாடலை உலகமெங்கும் இருக்கும் தளபதி விஜய்யின் அற்புதமான ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Suresh

Recent Posts

“நான் சூனியக்காரியா..?” – முன்னாள் காதலரை நினைத்து வேதனை பகிர்ந்த கங்கனா ரணாவத்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் Kangana Ranaut, தற்போது அரசியலிலும் காலடி பதித்து எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். தமிழில் கடைசியாக…

2 days ago

விஜய்யின் ‘பஞ்ச்’ வசனம்… சத்யராஜ் சர்ச்சைக்கு சிபிராஜின் பதிலடி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், அரசியல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், Vijay தனது அரசியல் பயணத்தை…

2 days ago

மனதளவில் பாதிக்கப்பட்ட தருணம் – ஆர்.ஜே. பாலாஜி மனம் திறந்த பேச்சு

R.J.Balaji இயக்கத்தில், Suriya மற்றும் Trisha நடித்துள்ள புதிய படம் ‘கருப்பு’ மே மாதத்தில் வெளியாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தப்…

2 days ago

வா… வா… என் தேவதையே… குட் நியூஸ் சொன்ன அட்லீ!

தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் இயக்குநராக திகழும் Atlee மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். ராஜா ராணி, தெறி, மெர்சல்,…

2 days ago

பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியக் கொடி… சவாலான பந்தயத்தில் அசத்திய அஜித் குமார்!

திரைத்துறையில் மட்டுமல்லாமல், கார் ரேசிங் உலகிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் Ajith Kumar. நடிப்பைத் தாண்டி, அதிரடி கார்…

2 days ago

Kara Official Trailer

Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…

2 days ago