prasanna
கதாநாயகனாக நடித்து வந்த பிரசன்னா இப்போது பல படங்களில் வில்லன் வேடங்களில் வருகிறார். சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:-
எனக்கு அஜித்குமாரை மிகவும் பிடிக்கும், அவருக்கு வில்லனாக நடிக்க ஆசை உள்ளது. விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். விஷால் எனது நல்ல நண்பர், இயக்குனராக மாறி உள்ள அவருக்கு வாழ்த்துகள். சமீபகாலமாக வில்லன் வேடங்களில் நடித்து வருகிறேன். இந்த மாற்றமானது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
கதாநாயகனாக நடிக்க இப்போது மூன்று படங்களை தேர்வு செய்து இருக்கிறேன். எந்த படம் முதலில் தொடங்கும் என்று தெரியவில்லை. கொரோனாவால் பட வேலைகள் பாதித்துள்ளன. ஓரங்கட்டப்படுவது சோர்வை ஏற்படுத்துகிறது. முன்னால் நிற்க விரும்புகிறேன்.
அந்த இடத்தை அடைவேன். புதிய இயக்குனர்கள் படங்களில் கதையை பொறுத்து நடிக்க ஒப்புக்கொள்கிறேன். ஊரடங்கை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கழித்து வருகிறேன். ஓவியம் வரைகிறேன். குழந்தைகளுடன் சேர்ந்து பொம்மைகள் வைத்து விளையாடுகிறேன். இவ்வாறு பிரசன்னா கூறினார்.
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…