அப்படி நான் சொல்லவே இல்லை… அது போலி – விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டார் என சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவியது. அப்போது “போய் வேலை இருந்தா பாருங்கடா” என ட்விட் செய்து பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை ஜோதிகா ஒரு விருது விழாவில் கோவில்கள் பற்றி பேசிய வீடியோ சர்ச்சையில் சிக்கி வருகிறது. கோவிலுக்கு உண்டியலில் பணம் போடுவது போல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள் என கேட்டிருந்தார் ஜோதிகா.

ஜோதிகாவின் இந்த கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாக கூறி நேற்று முதல் ஒரு போலியான ட்விட் உலா வருகிறது.

“ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது” என அதில் விஜய் சேதுபதி கூறியது போல குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ட்விட் முற்றிலும் போலியானது, அதை போட்டோஷாப் செய்து பரப்பியது யார் என்பது தெரியவில்லை என பிரபலங்கள் சிலர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அது Fake என விஜய் சேதுபதி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

Suresh

Recent Posts

‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!

'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…

1 hour ago

‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு

‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…

2 hours ago

இன்று’அங்கம்மாள்’ கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ ராதிகா

இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…

2 hours ago

விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்’ வெளியிட திட்டம்?

விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…

2 hours ago

‘புருஷன்’ பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும்

'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…

2 hours ago

Uyire Uyire – Lyrical video

https://youtu.be/qPaPA3AQ4JI?si=rIh8FG_BJwv1wjsy

10 hours ago