அதர்வாவுக்காக 66 அழகிகளை நிராகரித்த இயக்குனர்

அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்க, மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ரவீந்திர மாதவா டைரக்டு செய்கிறார். இவர், எம்.பி.ஏ. பட்டதாரி. பூபதி பாண்டியன், சுசீந்திரன், தெலுங்கு டைரக்டர் கொரட்டால சிவா ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். தனது முதல் படம் பற்றி அவர் கூறும்போது,

“இந்தப் படத்தின் கதாநாயகன் அதர்வா முரளி, கதாபாத்திரத்துக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருப்பார். கதாநாயகியை தேர்வு செய்வதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. அழகு, மென்மை, நடிப்பு திறன் ஆகிய மூன்றும் கலந்தவராக இருக்க வேண்டும். படத்தில் அவர் சும்மா வந்து போகிறவராக இல்லை. வில்லனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கனமான கதாபாத்திரம், அது.

அப்படி ஒருவரை தேர்வு செய்ய நாடு முழுவதும் தேடினோம். 66 அழகிகளை பார்த்தோம். கடைசியாக லாவண்யா திரிபாதியை தேர்வு செய்தோம். இவர் தனது அழகாலும், நடிப்பு திறனாலும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்வார் என்பது உறுதி’’ என்கிறார், டைரக்டர் ரவீந்திர மாதவா.

Suresh

Recent Posts

Polladha Aasaigal Lyric Video

Polladha Aasaigal Lyric Video | 29 | Sean Roldan | Vidhu, Preethi Asrani | Rathna…

8 hours ago

“நாட்டின் சிறந்த நடிகை சாய்பல்லவி தான்!” – அமீர்கான் புகழாரம்

பாலிவுட் நடிகர் Aamir Khan தனது மகன் Junaid Khan மற்றும் Sai Pallavi நடித்துள்ள ‘ஏக் தின்’ (Ek…

8 hours ago

Kara – தனுஷ் படத்திற்கு தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

நடிகர் Dhanush நடித்துள்ள ‘கர’ திரைப்படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. ‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர்…

8 hours ago

‘தி இந்தியா ஸ்டோரி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இயக்குநர் Chetan DK இயக்கத்தில், Kajal Aggarwal மற்றும் Shreyas Talpade முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’…

9 hours ago

தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: தென்னிந்திய நடிகர் சங்கம் எதிர்ப்பு

சென்னையில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற Tamil Film Producers Council பொதுக்குழு கூட்டத்தில், சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கடந்த…

9 hours ago

பிரபல பாலிவுட் நடிகர் பரத் கபூர் காலமானார்

மூத்த நடிகர் Bharat Kapoor, மாரடைப்பு காரணமாக தனது 80வது வயதில் காலமானார். மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனையில் பிற்பகல்…

9 hours ago