Meena
நடிகை மீனா 1991-ம் ஆண்டு வெளியான `என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் அவர் ரஜினியின் மனைவியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக அவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார். ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் மீனா, ரஜினியுடன் எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 24 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முருங்கைக் கீரை பொரியல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில்…
கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக…
சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது…
ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…