Categories: Movie Reviews

அடுத்த சாட்டை திரை விமர்சனம்

நடிப்பு – சமுத்திரக்கனி, யுவன், அதுல்யா ரவி, தம்பி ராமையா, சரவண சக்தி மற்றும் பலர்

தயாரிப்பு – 11- 11 புரெடக்ஷ்ன்ஸ்

இயக்கம் – எம் அன்பழகன்

இசை – ஜஸ்டின் பிரபாகரன்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

வெளியான தேதி – 29 நவம்பர் 2019

ரேட்டிங் – 3/5

இன்றைய தலைமுறையினருக்கு பிடிக்காத ஒரு விஷயம் அட்வைஸ் சொல்வது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் சொல்லியே கேட்காதவர்கள் ஒரு படத்தைப் பார்த்து மாறுவார்களா என்ன என்ற கேள்வி இந்தப் படம் பார்க்கும் போது நம்முள் எழும்.

இயக்குனர் அன்பழகன் சாட்டை படத்தில் பள்ளியில் இருக்கும் பிரச்சனைகள், ஈகோ மோதல்கள் ஆகியவற்றை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருந்தார். ஏழு வருடங்கள் கழித்து இந்த அடுத்த சாட்டை படத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே இருக்கும் மோதல், பேராசிரியர்களுக்கு இடையே இருக்கும் ஈகோ ஆகியவற்றை வைத்து தேவைப்படும் இடங்களில் சாட்டையடி கொடுத்திருக்கிறார். இயக்குனர் எம் அன்பழகன்

தனியார் கலைக் கல்லூரி ஒன்றின் தமிழ்ப் பேராசிரியர் கதாநாயகன் சமுத்திரக்கனி. கல்லூரிக்குள் எந்தப் பிரச்சினை வந்தாலும் தனி ஆளாக நின்று அவற்றை தீர்த்து வைக்கிறார். கல்லூரி முதல்வரான தம்பி ராமையா பேச்சைக் கூட கேட்க மாட்டார்.

சாதிப் பிரச்சினையால் பிரிந்திருக்கும் மாணவர்களை ஒன்று சேர்த்து அவர்களை நல்வழிப்படுத்துகிறார். இருப்பினும் ஒரு பிரச்சினையில் கதாநாயகன் சமுத்திரக்கனியை சிக்க வைத்து அவரை சஸ்பென்ட் செய்ய வைக்கிறார்

தம்பி ராமையா. மீண்டும் கல்லூரிக்கு வரும் கதாநாயகன் சமுத்திரக்கனி மாணவர்களை ஒன்றிணைத்து மாணவர் நாடாளுமன்றம் ஒன்றை ஆரம்பித்து மாணவர்களுக்காக பல புதிய திட்டங்களை உருவாக்குகிறார்.

அது பிடிக்காத தம்பி ராமையா அவற்றையெல்லாம் தடுக்க நினைக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

கல்லூரிக் கதைதான் என்றாலும் வழக்கமாகப் பார்க்கும் காதல் கதை, அபத்தமான நகைச்சுவை, ஆண், பெண் பழக்கம் என வழக்கமான காட்சிகள் இல்லாமல் புது மாதிரியான மாணவர் முன்னேற்றத்திற்கான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் அன்பழகன்.

பல காட்சிகளில் அட்வைஸ் மழைகளை அள்ளி தெளிக்கிறார் கதாநாயகன் சமுத்திரக்கனி என்றாலே அட்வைஸ்தான் கதாநாயகன் சமுத்திரக்கனி. படத்திற்கு திரைக்கதை எழுதுவதற்கு முன்பே கல்லூரிகளில் என்னவெல்லாம் பிரச்சினைகள் வரும் அவற்றை எப்படியெல்லாம் தீர்க்கலாம்,

எங்கெல்லாம் வந்து கதாநாயகன் சமுத்திரக்கனி அட்வைஸ் செய்யலாம் என்பதை பெரிய பட்டிலிட்டு எழுதியிருப்பார் போலிருக்கிறது. ஆரம்பத்தில் அவை கொஞ்சம் அலுப்பைத் தட்டினாலும், போகப் போக பழகிவிடுகிறது.

இப்படியான கதாபாத்திரங்கள் கதாநாயகன் சமுத்திரக்கனிக்கென்றே அளவெடுத்து உருவாக்கப்பட்டவை போலத்தான் இருக்கின்றன. அதில் கதாநாயகன் சமுத்திரக்கனி அப்படியே பொருந்திப் போகிறார்.

கதாநாயகன் சமுத்திரக்கனியை காதலிக்கும் கல்லூரிப் பேராசிரியராக ராஜஸ்ரீ பொன்னப்பா. தமிழ் முகமில்லாமல் ஹிந்தி முகமாகத் தெரிகிறார்.

காதல் காட்சிகள் என்றெல்லாம் வைக்காமல் அவர்கள் செய்யும் வேலையின் கௌரவத்தைக் காப்பாற்றும் விதத்தில் அவர்களது காதலை கல்யாணத்தில் முடித்து வைக்கிறார் இயக்குனர். எம் அன்பழகன்

கல்லூரி மாணவர்களாக யுவன், கௌசிக், பசங்க ஸ்ரீராம், மாணவியாக அதுல்யா ரவி. அவரவர் வயதுக்கேற்ற கதாபாத்திரம் என்பதால் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள்.

தற்போது பல பள்ளி, கல்லூரிகளில் தங்களது சாதி அடையாளத்தைக் காட்டும் விதத்தில் கையில் வண்ண வண்ண கயிறு கட்டிக் கொண்டு இருக்கும் மாணவர்களின் போக்கை கடுமையாக சாடியிருக்கிறார் இயக்குனர். எம் அன்பழகன்

கதாநாயகி அதுல்யா ரவியை ஆவசேமாகப் பேச வைத்து சாதியால் பிரிந்து கிடக்கும் மாணவர்களை ஒன்று சேர்க்கிறார்கள்.

மாணவர் நாடாளுமன்றம், மாணவர்களுக்கான வேலை திட்டங்கள் என கலைக் கல்லூரிகளும் எப்படியெல்லாம் செயல்படலாம் என சில யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள். இயக்குனர் எம் அன்பழகன்

தம்பி ராமையா போன்ற கதாபாத்திரங்களும், மூர்த்தி போன்ற கதாபாத்திரங்களும் இந்தக் காலத்திலும் இருக்கின்றன என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்களும் சரி மற்ற பேராசிரியர்களாக நடித்திருப்பவர்களும் சரி நிறைவான நடிப்பையே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

சாதிப் பேரைச் சொல்லிக் கொண்டு வசூல் வேட்டையில் இறங்கும் அரசியல்வாதிகளுக்கும் சேர்த்து சாட்டையடி கொடுத்திருக்கிறார் இயக்குனர். எம் அன்பழகன்

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களை ரசிக்க முடியவில்லை. பின்னணி இசையும் குறிப்பிடும்படி இல்லை.

இடைவேளை வரை படத்தை விறுவிறுப்பாக நகர்த்த சாதிப் பிரிவு, காதல், ஆசிரியர்கள் மோதல் என பல சம்பவங்கள் இருக்கின்றன. இடைவேளைக்குப் பின் படத்தை எப்படி நகர்த்துவது என்பதில் கொஞ்சம் யோசித்திருக்கிறார்கள். முன்பாதி போலவே இரண்டாவது பாதியிலும் இன்னும் அழுத்தமான காட்சிகள் இருந்திருக்கலாம்.

அடுத்த சாட்டை – அட்வைஸ் ஜாதி மழையில்…

admin

Recent Posts

ஜனநாயகன் படம் எப்படி இருக்கும்..H.வினோத் கொடுத்த தரமான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…

2 hours ago

வருத்தப்பட்ட கிரிஷ் பாட்டி, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…

4 hours ago

சூர்யாவை பார்த்த சுந்தரவல்லி, வலியில் துடிக்கும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

5 hours ago

மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள்..!

மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

20 hours ago

ரோபோ ஷங்கர் மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்.!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…

1 day ago

ரோபோ ஷங்கர் உடல் பாதிப்படைய காரணம் என்ன தெரியுமா? பிரபல நடிகர் சொன்ன விஷயம்.!!

ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…

1 day ago