Latest Tamil cinema News
சினிமா விமர்சனம்

டியர் காம்ரேட் சினிமா விமர்சனம்

கரு – காதலும் பிரிவும் மீண்டும் சேரும் காதலும் தான் டியர் காம்ரேட் படத்தின் கரு.

கதை – அநியாயத்தை கண்டால் பொங்கி விடும் இளைஞன் விஜய் தேவரகொண்டா, ஒரு சிறு விபத்தில் ராஷ்மிகாவை சந்திக்கிறார். பின் அவர் தன் சொந்தம் என அறிந்து காதலிக்கிறார். ராஷ்மிகா வாழ்வில் அவர் டியர் காம்ரேடாக பயணிக்கும் காதல் பயணத்தில் அவரது காம்ரேட் குணம் ஏற்படுத்தும் பிரச்சனை அது தீர்கிறதா எனும் பயணம் தான் கதை.

விமர்சனம் – சில ஜோடிகளுக்கு மட்டும் தாம் ரசிகர்கள் அதிக வரவேற்பு தருவார்கள். கீதா கோவிந்தம் மூலம் அது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காம்போவிற்கு கிடைத்திருக்கிறது. இவர்கள் இருவரின் நடிப்பை அத்தனை அற்புதமாக இருக்கிறது. மொத்த படமும் இவர்களின் காதலில் தான் பயணமாகிறது. அந்தப்பயணத்தை நமக்கு நெருக்கமாக்கியிருக்கிறார்கள்.

Ajith: நேர்கொண்ட பார்வை படத்தில் பிளாஷ்பேக் காட்சியா? தாடியுடனும், தாடியில்லாமலும் தல!

ஒரு படம் ஒரு அனுமபவமாக நமக்கு மாறுவது அதன் நிஜக்களமும் பின்னணியும் பதிவாகும் விதத்தில் தான். இந்தப்படம் முழுதும் விரவியிருக்கும் விவரங்கள் படத்தை மறக்க முடியாத அனுபவமாக்குகிறது. ஒரு காதல் பயணத்தை நமக்கு தந்துள்ளார்கள் அதில் பெண்களின் பிரச்சனைககளையும் அதை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அழுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.
Jackpot: கபாலி ஸ்டைலில் ஜாக்பாட்: வைரலாகும் கோட்டையில் நம்ம கொடி பறக்குதா பாடல்!
விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு ஆசிர்வாதம் அதை அழகாக ஒவ்வொரு படமாக தேர்ந்து பண்ணிக்கொடிருக்கிறார். இப்படம் அவரது மகுடத்தில் இன்னொரு இறகு மனிதர் நடிப்பு ராட்சசனாக இருக்கிறார். காதல் அடிதடி கொப்பளிக்கும் கோபம் என அனைத்தையும் அப்படியே கொண்டுவந்திருக்கிறார். ராஷ்மிகா பொம்மை ஹீரோயினாக அல்ல படத்திம் உயிர் நாடியாக இருக்கிறார். இவர் தியேட்டரில் எண்டிரி ஆகும் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் பறக்கிறது. காம்ரேட் ஆக அவரும் கிரிக்கெட் வீரராக இவரும் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள். இருவருக்குமான லவ், ரொமான்ஸ் கெமிஸ்டிரி சூப்பர்.
டிக் டாக் புகழ் சிறுமி ஆருணி உயிரிழந்த சோகம்!
பாபி, லில்லி என இவர்களின் பயணம் இன்னும் நெடு நாட்கள் நீடித்திருக்கும். இவர்களின் ரொமான்ஸ் பலரையும் பொறாமைப்பட வைக்கிறது. பாரத் கம்மா பட கதையை இயற்கையாக கொண்டு செல்கிறார். சென்னை, தூத்துக்குடி, பெங்களூரு என காட்சிகள் மாறும் விதமாக மழைக்காலத்தில் ரயில் பயணமாக காட்டுகிறார். அர்ஜூன் ரெட்டிக்கு பிறகு இது வேறொரு காதல் பயணம். ஆனால் இதுவும் அழகானது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் படத்தில் காதலை சொக்கவைக்கும்படி இருக்கிறது. அவரது பின்னணி இசையும் கிளாசிக். சுஜித் சராங்க் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒரு வாழ்க்கையை காட்டியிருக்கிறது. டியர் காம்ரெட் காம்ரேடுக்கான அர்த்தம் சொல்லியிருக்கிறது.

பலம் – விஜய், ராஷ்மிகா ரொமான்ஸ், அழகான காதல், திரைக்கதை.

பலவீனம் – சற்றே அதிதமான படத்தின் நீளம்.

பைனல் பஞ்ச் – டியர் காம்ரேட் அனைவருக்கும் காதலிக்கும் காம்ரேடாக வந்திருக்கிறார்.

Related posts

தொரட்டி விமர்சனம்.!

user

ஆடை சினிமா விமர்சனம்

user

அக்யூஸ்ட் நம்பர் 1 சினிமா விமர்சனம்

user